;
Athirady Tamil News

விசா முடிந்த பின்னரும் நடுக்கடலில் பாலியல் தொழில் நடத்திய நபர்..!!

0

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் தாய்லாந்தில் பாலியல் தொழிலை ஒருங்கிணைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Stephen Allan Carpenter என்ற நபர் சுற்றுலா விசாவில் தாய்லாந்தில் பட்டாயாவுக்கு சென்றுள்ளார். அங்கு தனது விசாக்காலம் முடிந்த பின்னர் சட்டத்திற்கு விரோதமான முறையில் தங்கியிருந்துள்ளார்.

மேலும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் படகில் வைத்து பாலியல் தொழில் நடத்திவந்துள்ளார். இதற்காக பேஸ்புக் பக்கத்தில் கவர்ச்சியான தாய்லாந்து பெண்களை வைத்து விளம்பரம் கொடுத்துள்ளார்

இதனை பார்த்து வரும் வாடிக்கையாளர்களை கடலின் வெகுதூரத்தில் அழைத்து சென்று பாலியல் தொழில் நடத்தியுள்ளார்.

இதனை புகைப்படமாகவும் எடுத்துவைத்துள்ளார். இந்நிலையில் இவரது பேஸ்புக் விளம்பரத்தை வைத்து இந்நபரை தாய்லாந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தாய்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 19 =

*