;
Athirady Tamil News

வீடியோ கேமிற்கு அடிமையான சிறுவன்: பாத்ரூம் கூட செல்லாததால் நேர்ந்த கொடுமை..!!

0

பிரித்தானியாவில் 10 வயது சிறுவன், பாத்ரூம் கூட செல்லாமல் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடி கொண்டேயிருந்தால் குடல் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் பலரும் வெளியில் ஓடி விளையாடுவதை தவிர்த்துவிட்டு, வீட்டில் அமர்ந்தபடியே சோம்பேறித்தனமான, மனதிற்கு அதிக உளைச்சலை கொடுக்கக்கூடிய வீடியோ கேம்களை விளையாடி கொண்டிருக்கின்றனர்.

ஒரு சிலர், இதில் ஒருபடி மேலே சென்று வீடியோ கேம்களுக்கு அடிமையாக கூட மாறிவிடுகின்றனர். இதற்கு பெற்றோர்களும் ஆதரவு கொடுக்கின்றனர் என்பதுவே கொடுமையின் உச்சக்கட்டம்

சமீபத்தில் இதுகுறித்து குழந்தைகள் நலமருத்துவர் பேகென்ட் தனியார் இதழுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் சந்தித்த 10 வயது சிறுவன் குறித்து பேசுகையில், “வழக்கமாக நான் ஒரு நாள் மருத்துவமனையில் அமர்ந்திருக்கும்போது, பார்க்கவே பரிதாபமாக இருந்த 10 வயது சிறுவனை ஒருவர், தோளில் சுமந்துகொண்டு வந்தார்.

அந்த சிறுவனை நான் பரிசோதிக்கும்பொழுது, அவனது வயிற்றின் குடல் பகுதியில் மிகப்பெரிய கட்டி ஒன்று இருப்பதை பார்த்து, அது புற்றுநோயாக இருக்குமோ என அச்சமடைந்தேன்.

பின்னர் அதைப்பற்றி விசாரிக்கும்பொழுது தான் ஆச்சர்யமான தகவல்கள் வெளியானது. அந்த சிறுவன் World of Warcraft, Call of Duty மற்றும் FIFA வீடியோ கேம்களை, பாத்ரூம் கூட செல்ல மறந்து தினமும் 8 மணி நேரம் விளையாடிக் கொண்டிருந்தாலே, இந்த அளவிற்கு விபரீதம் நடந்துள்ளது” என தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + sixteen =

*