;
Athirady Tamil News

சிறுத்தையை கொலை செய்த இருவர் கைது…!!

0

சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பொதுமக்களை தாக்கிய சிறுத்தை ஒன்று அக் கிராமத்தவர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டது.

இது தொடபில் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததையடுத்து குறித்த சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த கொலை தொடர்பில் சமூக வளைதலங்களில் வெளியான காணொளிகளை ஆதாரமாகக்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டனர்.

இதனையடுத்து குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + twenty =

*