;
Athirady Tamil News

பா.ஜ.க. தலைவருக்கு இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்..!!

0

ஜம்மு – காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்னர் “ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பா.ஜ.க. – பி.டி.பி. கூட்டணி உடைவதற்கு முக்கிய காரணமாக இந்த சம்பவம் கூறப்பட்டது.

இதற்கிடையில், அம்மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் சவுத்ரி லால் சிங் நேற்று பேசுகையில், “காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்கள், தாங்கள் கொண்டுள்ள பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டுக்கும், செய்திகளை உண்மைத் தன்மையுடன் அளிப்பதற்கும் இடையே ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இல்லையனில் சுஜாத் புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக்கூடும்” என மிரட்டல் தொணியில் பேசினார்.

சவுத்ரி லால் சிங்கின் இந்த பேச்சு கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இதற்கு அந்த மாநில பத்திரிகையாளர் சங்கமும், தேசிய மாநாட்டுக் கட்சியும், பிடிபி கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி லால் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், சவுத்ரி லால் சிங்கின் இந்த மிரட்டலுக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம், இந்திய பெண்கள் பத்திரிகையாளர் சங்கம், இந்திய பத்திரிகையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை கடுமையான கண்டனத்தை இன்று பதிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக இந்த அமைப்புகள் இன்று விடுத்துள்ள கூட்டறிக்கையில், ‘காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிடும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள சட்டசபை உறுப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற கருத்துகளை கிரிமினல் நடவடிக்கையாகவும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவும் பார்க்க வேண்டியுள்ளது. தன்னலம் கருதாமல் மிக ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் இதைப்போல் மிரட்டப்படுவது ஏற்புடையதல்ல’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம், கத்துவா பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டதால் மந்திரி பதவியில் இருந்து சவுத்ரி லால் சிங் விலக நேர்ந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + six =

*