;
Athirady Tamil News

கோட்டைக்காடு சைவவாலிபர் சங்க முன்பள்ளி திறப்பு விழா..!! (படங்கள்)

0

கோட்டைக்காடு சைவவாலிபர் சங்க முன்பள்ளி திறப்பு விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

மல்லாகம், கோட்டைக்காடு சைவவாலிபர் சங்க சனசமூக நிலையத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட முன்பள்ளியின் திறப்பு விழா இன்று 24.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 03 மணியளவில் சனசமூக நிலையத்தலைவர் என்.சூரியகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு நாடாவினைவெட்டி கட்டிடத்தைத்திறந்து வைத்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபைத்தவிசாளர் க.தர்ஷன், கிராம சேவையாளர் யூஜின் மசனட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் புதிதாக அமைக்கப்பட்ட முன்பள்ளி திறந்துவைக்கப்பட்டதுடன், கல்வி, விளையாட்டுத்துறைகளில் சாதனைகள் படைத்த இளைஞர், யுவதிகள், சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபைத்தவிசாளர் க.தர்ஷன், சனசமூக நிலைய நிர்வாகிகள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*