என்னை எப்படி சம்மதிக்க வைப்பாய்? நேர்முக தேர்வில் இளம் பெண்ணை பாலியல் துஷ்ப்ரயோகம் செய்த நபர்..!!

திருமணமான ஹோட்டல் மானேஜர் ஒருவர் தனது ஹோட்டலுக்கு நேர்முக தேர்வுக்கு வந்திருந்த பெண்ணை பாலியல் துஷ்ப்ரயோகம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய நாட்டில் உள்ள டார்வின் பகுதியில் மந்த்ரா பந்தனாஸ் ஹோட்டலில் தான் மேற்கண்ட நேர்முக தேர்வு சம்பவம் நடந்திருக்கிறது.
கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் மேற்கண்ட ஹோட்டலில் வேலையில் சேருவதற்காக தைவான் நாட்டை சேர்ந்த 29 வயது பெண் வந்திருக்கிறார்
மேற்கண்ட ஹோட்டலில் ஒரு அறையில் நேர்முக தேர்வு நடந்து கொண்டிருக்கும்போதே Ruel Lizardo Baradas (34) என்பவர் குறித்த பெண்ணிடம் இந்த வேலை கிடைக்க வேண்டும் என்றால் என்னை எப்படி சம்மதிக்க வைப்பாய் என கேள்வி கேட்டபடி அவரது அனுமதி இல்லாமல் அவரை இருமுறை பாலியல் துஷ்ப்ரயோகம் செய்திருக்கிறார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
Ruel Lizardo Baradas குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இவருக்கான தண்டனை என்ன என்பது அடுத்த கட்ட நடவடிக்கையின் மூலம் தெரியவரும்