;
Athirady Tamil News

விறுவிறுப்பான ஃபிபா உலகக் கோப்பை.. ஜப்பான் அணியை எதிர்கொள்ளும் செனெகல்..!!

0

ஃபிபா உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஜப்பான் மற்றும் செனெகல் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கி நடந்து வருகிறது. இதனால் இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.முக்கியமான பெரிய அணிகள் சொதப்பி வரும் நிலையில் அறிமுக அணிகள் மாஸ் காட்டி விளையாடி வருகிறது. இந்த நிலையில் இன்று ஜப்பான் செனெகல் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.

எச் குழுவில் நடக்கும் போட்டியில் இது மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் அவர்களின் குழுவில் முன்னிலையில் இருந்து பிற அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். கொலம்பியாவிற்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் ஜப்பான் மிகவும் வலுவாக இருக்கிறது. அணியின் புதிய கோச் அகிரா ஜப்பானுக்கு எதிர்பார்க்காத அளவிற்கு உத்வேகத்தை அளித்துள்ளார். அதேபோல் செனெகல் அணியும் கால்பந்து தொடரில் மிகவும் வலிமையாக உள்ளது.

ஏற்கனவே போலந்து அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தன்நம்பிக்கையுடன் உள்ளது. இதனால் இன்றைய போட்டி கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும். ஜப்பான் அணியில் இன்றைய போட்டியில் ஏஜி, ஹீரோகி, மாயா யாஷிடா, ஜென் ஷாஜி, யுடோ நகாடமோ, மகோடா, காக்கு, ஜென்கி, ஷின்ஜி, தகாஷி, யூயா ஒசாக்கா ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது. அதேபோல் செனெகல் அணியில், காதீம்,மவுசா, சாலிப், காலிடாவ், கஸாமா, இஸ்மாயிலா, ஆல்பிரட், இடிர்ஸா, சாடியோ, மாமே டியோப், ம்பாய் நியாங் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*