;
Athirady Tamil News

வவுனியாவில் ஊடகவியலாளர் என்ற போர்வையில் பணம் பறிக்கும் நபர் : வெளிப்படுத்திய பிரமுகர்..!!

0

வவுனியாவில் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்தி செய்திகளை பிரசுரிக்க பணம் பறிக்கும் நபர் தொடர்பாக பிரமுகரொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

வடக்கில் இருந்து வரும் பிரபல பத்திரிகையொன்றின் விளம்பர பிரிவில் பணியாற்றும் குறித்த நபர் ஊடகவியலாளராக தன்னை அறிமுகப்படுத்துவதுடன் செய்திகள், பத்திரிகையில் படங்கள் மற்றும் ஆண்டு மலருக்கான வாழ்த்துச்செய்திகளை பிரசுரிக்க பணம் கோரியதாக அப்பிரமுகர் தெரிவித்தார்.
இதற்கான ஆதாரத்தினை பெற்றுள்ள வவுனியா ஊடகவியலாளர்கள் இந் நபர் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த நபர் வவுனியா மாவட்டத்தில் பல தவறான செய்திகளை பரப்பி வருவதுடன் ஊடகவியலாளர்கள் தொடர்பாக அவர்களது உறவினர்களது வீடுகளுக்கு சென்று அவர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

இந் நிலையில் குறித்த நபர் புலனாய்வுப்பிரிவுகளுடன் தொடர்புடையவரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இவர் தொடர்பான மேலதிகள் தகவல்களை தேடிவருவதுடன் ஆதராங்களையும் திரட்டியுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*