;
Athirady Tamil News

இராணுவ அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம்..!!

0

இரத்மலான, சக்கிந்தாராம வீதியில் இராணுவ கோப்ரல் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (25) காலை 7.20 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இராணுவ கோப்ரல் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 1 =

*