;
Athirady Tamil News

ரொனால்டோவின் தோளில் மிகப் பெரிய சுமை… ஈரானை வென்று நாக் அவுட் போகுமா போர்ச்சுகல்..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மொராக்கோவை வென்றால் நாக் அவுட் சுற்று முன்னேறலாம் என்ற நிலையில் ஸ்பெயின் களமிறங்குகிறது. அதே நேரத்தில் ஈரானை சந்திக்கிறது ரொனால்டோவின் போர்ச்சுகல் 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்று பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்குகின்றது. இதில் பி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மொராக்கோவை சந்திக்கிறது ஸ்பெயின்.

அதற்கடுத்த ஆட்டத்தில் ஈரானை சந்திக்கிறது போர்ச்சுகல. ரொனால்டோவுடன் டிரா பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது. ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிராவானது. அதற்கடுத்து போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது. ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது. மொராக்கோ அவுட் தற்போதைய நிலையில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது.

இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுகிறது. சாதிப்பாரா ரொனால்டோ இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களிலும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனிமனிதனாக போர்ச்சுகல் அணியை தாங்கிப் பிடித்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரேசிலில் நெய்மர், எகிப்தின் மொகம்மது சலா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றிய நிலையில், போர்ச்சுகல்லின் ரொனால்டோ கலக்கி வருகிறார்.

இதுவரை 4 கோல்களை அடித்துள்ளஆறஅ> போர்ச்சுகலுக்கு வாய்ப்பு பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மொராக்கோவை ஸ்பெயின் சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுகல் ஈரானை சந்திக்கிறது. 4 புள்ளிகளுடன் உள்ள போர்ச்சுகல், 3 புள்ளிகளுடன் உள்ள ஈரானை சந்திக்கிறது. ரொனால்டோ நல்ல பார்மில் உள்ளதால், இன்றைய ஆட்டத்தில் வென்று போர்ச்சுக்கல் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − eight =

*