;
Athirady Tamil News

ஒருபுறம் ரொனால்டோ அணி தயாராகிறது… நாக் அவுட் முன்னேறுமா… மொராக்கோவை சந்திக்கிறது ஸ்பெயின்..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மொராக்கோவை வென்றால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் ஸ்பெயின் களமிறங்குகிறது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன.

போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இன்று பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்குகின்றது. இதில் பி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மொராக்கோவை சந்திக்கிறது ஸ்பெயின்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*