;
Athirady Tamil News

செம வெயிட்டு யாரு…. ஹாட்ரிக் வெற்றி யாருக்கு… உருகுவே – ரஷ்யா இன்று மோதல்..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. இன்று முதல் மூன்றாவது ஆட்டங்களில் அணிகள் விளையாட உள்ளன. ஏ பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள ரஷ்யாவும் உருகுவேவும் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சந்திக்கின்றன. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்று பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்குகின்றது. இதில் ஏ பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள ரஷ்யா மற்றும் உருகுவே சந்திக்கின்றன.

ரஷ்யா அசத்தல் ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று ரஷ்யா வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் மொகம்மது சலாவின் எகிப்தை 1 – 0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது. எகிப்தை வென்றது ரஷ்யா அதற்கடுத்த ஆட்டத்தில் ரஷ்யா 3-1 என எகிப்தை வென்றது. அடுத்து நடந்த சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, தனது 100வது ஆட்டத்தில் பங்கேற்ற லூயிஸ் சூரஸ் கோலடிக்க 1-0 என உருகுவே வென்றது. முன்னேறிய அணிகள் இதன் மூலம் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ள ரஷ்யா மற்றும் உருகுவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

அதே நேரத்தில் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்த எகிப்து மற்றும் சவுதி அரேபியா பிரிவு சுற்றிலேயே வெளியேறின. டாப்பில் எந்த அணி ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும், வெற்றியைத் தொடர வேண்டும் என்றும், புள்ளிப் பட்டியலில் டாப்பில் இருக்க வேண்டும் என்றும் இரு அணிகளும் முயற்சிக்கும். அதனால் இன்றைய ஆட்டம் சுவாரசியமாக இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 17 =

*