;
Athirady Tamil News

ஒடிசாவில் 1000 மரக்கன்றுகளை வரதட்சணையாக கேட்ட பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டுமழை..!! (வீடியோ)

0

ஒடிசாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர்,1000 மரக்கன்றுகளை வரதட்சணையாகக் கேட்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேந்திரபுரா மாவட்டம் பாலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் காந்த் பிஸ்வால் என்பவர் உள்ளூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ரேஷ்மி ரேகா என்ற ஆசிரியைக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றபோது பிஸ்வால் கேட்ட வரதட்சணையைக் கேட்ட மணமகளின் பெற்றோர் ஆச்சரியமடைந்தனர்.

தங்கமோ, பணமோ தனக்கு தேவையில்லை என்றும், கிராமத்தில் நட்டுவைக்க 1,000 மரக்கன்றுகள் கொடுத்தால் போதும் என்றார். மாலையிடப் போகும் மணாளனின் விருப்பம், மனையாளுக்கும் மகிழ்ச்சியளிக்கவே திருமணத்தின்போது தாய்வீட்டு சீதனமாக மரக்கன்றுகள் லாரியில் ஏற்றி அனுப்பப்பட்டன. அவற்றை திருமணத்திற்கு வந்தவர்களிடம் அளித்த பிஸ்வால், வீட்டுக்கு ஒரு மரம் நடுமாறு கேட்டுக் கொண்டார். பசுமையை விரும்பும் இந்த ஆசிரியருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 12 =

*