;
Athirady Tamil News

அரசியல் ரீதியாக நாங்கள் பார்க்காத சிறையே கிடையாது-ஜெயக்குமார்..!! (வீடியோ)

0

அரசியல் ரீதியாக தாங்கள் பார்க்காத ஜெயிலே கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை நடுக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் அங்காடியை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். மீன்கள் சுகாதாரமான முறையில் விற்கப்படும் வகையில் மேலும் 19 அங்காடிகள் கட்டப்பட்டு வருவதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆளுநரின் ஆய்வு மற்றும் அவரை செயல்பட விடாமல் தடுப்பது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குரிய குற்றம் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளதாகவும், அதேசமயம், சட்டத்திற்கு உட்பட்ட எந்தவொரு போராட்டமும் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றும் அவர் பதிலளித்தார். திமுக ஆட்சிக் காலத்தில் அரசியல் ரீதியாக அ.தி.மு.கவினரான தாங்கள் பார்க்காத சிறையே கிடையாது எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

காவல்துறை தனது கடமையை ஒழுங்காக செய்து கொண்டிருப்பதாகவும், பொதுமக்களுக்கு அவர்கள் நண்பன், சமூக விரோதிகளுக்கு எதிரி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 20 =

*