;
Athirady Tamil News

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒரு சில உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி..!!

0

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒரு சில உள்ளுராட்சி மன்ற உறுபபிர்களுகக அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், பிரதி அமைச்சர் கே. கே. மஸ்தான், குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்று வரும் நிலையில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் மாத்திரம் பிரசன்னமாகியுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுக்க மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் சில உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வாக்கை பயன்படுத்தி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக கூட்டத்தில் கலந்துகொள்ளாத உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
சுpல உறுப்பினர்கள் தமது செல்வாக்கை பயன்படுத்தி அபிவிருத்தி கழு கூட்டத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக நாம் புறக்கணிக்கப்படுகின்றோம். அத்துடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் தமது வட்டாரங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் முகமாக செயற்படும் நிலை உள்ளது.
எனவே எமது வட்டாரத்தின் தேவைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் எடுத்துரைப்பதற்காக சந்தர்ப்பத்தை இனி வரும் காலங்களில் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 18 =

*