;
Athirady Tamil News

ஹீரோயினாக என்ட்ரியாகும் பிக்பாஸ் ஜூலி..!!

0

ஜூலி நடிக்கும் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். திரைப்படத்திற்கான பணிகள் பூஜையுடன் (ஜூன் 23) தொடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானதிலிருந்து சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் ஜூலி. விமர்சனங்களை ஒதுக்கிவைத்துவிட்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வின் காரணமாக டாக்டராக முடியாமல் போன நிலையில் மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் வலுவான போராட்டங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. அனிதாவின் கதையைத் திரைப்படமாக எடுப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஜூலி புகைப்படம் இடம்பெற்ற போஸ்டரும் வெளியாகி விமர்சனங்களைச் சந்தித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் மேல் உருவாகியிருந்த எதிர்மறையான பிம்பம் அந்த விமர்சனங்களுக்கான காரணமாக இருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பணிகள் பரபரப்பாகத் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. ரன் ஹார்ஸ், ஆர்.ஜே.மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அஜய் இயக்குகிறார். நிகழ்வின் போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் அஜய், “இந்தப் படத்தில் நாயகியாக ஜூலியை நடிக்க வைக்கப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தைப் பார்த்த பிறகு அவர்கள் கூறியது தவறு என்று உணர்வார்கள். வணிக ரீதியான வெற்றிக்காகவோ பணம் பண்ணும் நோக்கிலோ இப்படத்தை நான் இயக்கவில்லை. மருத்துவ படிப்பு படிக்க முழு தகுதி இருந்தும் நம் கல்வி முறைக்குச் சிறிதும் பொருந்தாத ஒரு தேர்வு முறையால் மாணவி அனிதாவிற்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கமே காரணம். இத்திரைப்படம் தேசிய விருதைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

செல்வா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் மணிவர்மா கலை இயக்குநராகவும், ஆனந்த லிங்ககுமார் படத் தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர். தீனா இசையமைக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*