;
Athirady Tamil News

பிக் பாஸ் 2 : என்னதான் பிரச்சினை?..!!

0

நடிகர் கமலஹாசன் கடந்த ஆண்டு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதியில் இருந்து ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டாம் பாகம் முதல் பாகம் போல் இல்லை என பலராலும் கூறப்பட்டு வருகிறது. எதனால் பிக் பாஸ் 2க்கு நேர்மறையான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்களால் வருகிறது என்பதை பற்றி விசாரிக்கவும், ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்சினைகள் பற்றி விசாரிக்கவும், பிக் பாஸ் முதல் பாகத்தில் பணிபுரிந்த பெயர் சொல்ல விரும்பாத சிலரிடம் பேசினோம்.

“கடந்த ஆண்டும் இதே போல் ஃபெப்சி பணியாளர்களால் பிரச்சினைகள் வந்தது, ஆனால் அதை அசால்ட்டாக கையாண்டார்கள், கமலும் அதற்கு உறுதுணையாக இருந்தார். ஒரு வேலை விளம்பரத்திற்காக இப்போது செய்கிறார்களா, அல்லது தமிழ் திரைப்பட ஸ்ட்ரைக்கின் வீரியம், தற்போது ஃபெப்சி ஆட்கள் உறுதியாக இருப்பதற்கான காரணமா என்று தெரியவில்லை.

அதேநேரம் ஷோவும் தரமானதாக இல்லை. தற்பொழுது நான் வேலை செய்யவில்லை என்பதற்காக இதை சொல்லவில்லை. பிக் பாஸ்2, ஒரு அரை மணி நேரம் எப்படி அவுட் புட் வருகிறது என்பதற்காக பார்த்தேன். மிகவும் மோசமானதாக இருக்கிறது. எப்படியோ ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்தால் போதும் என்ற மனநிலையில் செய்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் அவுட் புட் வருவதற்கான டீமில் தமிழ் ஆட்கள் இல்லாமல் இருப்பதுதான் என்று நினைக்கிறேன். மற்ற இடங்களில் தமிழ் டீம் வேலை பார்த்தாலும் அவுட் புட் வரும் இடத்தில் இவர்களின் பங்கு மிகவும் முக்கியம். அதாவது இது தான் கதை என்று முடிவு செய்து, பங்கேற்றிருப்பவர்களை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்றார் போல் ஆடியோ எடிட் செய்து இறுதியில் ஒரு நல்ல அவுட் புட் தருவோம். ஆனால் தற்போதுள்ளவர்களுக்கு மொழி பிரச்சினை காரணமகா கதை என்ன என்பதையே அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

மேலும் நாங்கள் இருக்கும் போது நிறைய கதைகள் கிடைக்கும். பெஸ்ட்…பெஸ்ட் என்று அதில் தேர்வு செய்து போடுவார்கள். தற்போது ஆடியோவும் மிக மோசமாகவும், வாய்ஸ் க்ளியராக இல்லாமலும் இருக்கிறது. சம்மந்தமே இல்லாமல் சப்தம் எல்லாம் வருகிறது. இப்ப ஜூலியும், சினேகனும் பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் குரல் மட்டும்தான் வரும். ஆனால் இதில் செண்ட்ராயன், மும்தாஜ் பேசும் போது இடையில் சம்பந்தப்பட்ட ஆட்களைத் தாண்டி வெளியாட்கள் பேசுவதெல்லாம் கேட்கிறது. ஸ்கிரிப்ட்டுக்குள் இருக்கிறவர்களைத் தாண்டி.” என்றார்

பிக் பாஸ் ஸ்கிரிப்ட்டா என்று கேட்ட போது, “மும்தாஜ், செண்ட்ராயன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் இருவரது வாய்ஸ் மட்டும்தான் வரும். ஆன் ஃபிரேமில் இன்னும் நான்கு ஐந்து பேர் இருந்தாலும் நாங்கள் இருக்கும் போது. இது தான் ஸ்டோரி, இதுக்கு இந்த ஆடியோ மட்டும் போதும், மற்ற ஆடியோ எல்லாம் ப்ளாக் பண்ணுங்க என்போம். அப்படி அவர்கள் மூலம் அதை ஒரு கதை போல் உருவாக்கி ஒன்றரை மணி நேரத்துக்கு சுவாரசியமான சம்பவங்கள் கொண்டு, எடிட் செய்து கொடுப்போம்.

ஆனால் தற்போது எல்லோரும் பேசும் ஆடியோவும் கொடுக்கிறாகள். இதற்கு முக்கியக் காரணம் மொழி தெரியாமல் இருப்பது. ஏன் என்றால் இந்த முறை சவுண்ட் டீம் கர்நாடக ஆட்கள். மேலும் நாங்கள் வேலை பார்க்கும் போது தமிழ் ஆட்களாக இருந்தார்கள் அது எங்களுக்குக் கூடுதல் பலம். அடுத்து யார், இதற்கு அவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று எங்கலுக்கு தெரியும். தற்போது வேலை பார்ப்பவர்கள் பாம்பே ஆட்கள். அதுதான் இங்கு பிரச்சினை.

மேலும் பிக் பாஸ் 24 மணி நேரம் வேலை. 24 மணி நேரமும் எடிட்டிங் போய் கொண்டிருக்கும். 12 பேர் கொண்ட குழுவாக ஒரு 6 குழு வேலை பார்த்தோம். ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் அந்த குழு மாறும். அந்த 4 மணி நேரத்தில் எடுத்ததை அடுத்த 4 மணி நேரத்திற்கு எடிட்டிங் செய்து ஸ்டோரிகளாக உருவாக்குவோம். அதில் எது பெஸ்ட்டாக வருகிறதோ அது ஒளிபரப்ப செய்யப்படும். இப்படி 8 மணி நேரமாக மூன்று ஷிப்ட்டுகள் வேலை பார்த்தோம்.” என்றார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*