;
Athirady Tamil News

சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட குடிநீரை பாதுகாவலர் ஏன் ஊற்றினார்?..!!

0

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் அரசியல் தலைவர் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அதில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலும், அவருடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் குறித்துமே தற்போது அனைவராலும் பேசப்படுகின்றது.

பொதுவாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்றால் அதிதிகள் வரும் போது முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பில் ஈடுபடுவதுடன், அவர்கள் அருகில் யாரும் வரவிடாமல் பாதுகாப்பதும் அவர்களுடைய கடமையாக உள்ளது.

ஆனால் சம்பந்தருடைய பாதுகாவளர்கள் சற்று வித்தியாசமாக சம்பந்தனை அழைத்து வரும் போதே கையில் ஒரு கூடையை எடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இதைத் தொடர்ந்து புத்தக வெளியீட்டு விழாவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவா சம்பந்தன் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர்.

இதன்போது அதிதிகள் அனைவருக்கும் சுத்தமான போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டு இருந்தது.

சம்பந்தன் உரையாற்றும் போது இடையில் தண்ணீர் குடிப்பதை அவருடைய பேச்சுக்களில் நாம் கண்டுள்ளோம். அதேபோல் இங்கும் தண்ணீர் குடித்தார் ஆனால் அனைவருக்கும் வழங்கப்பட்ட தண்ணீர் அல்ல. சம்பந்தனுக்காக அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொடுத்த தண்ணீர்.

அதாவது சம்பந்தன் உரையாற்றும் போது அவரக்கு வைக்கப்பட்ட தண்ணீரை எடுத்து அதை கீழே ஊற்றி விட்டு வேறு தண்ணீர் ஊற்றி சம்பந்தனின் முன் வைத்துள்ளார்.

இந்த விடயம் அங்கு செய்தி சேகரிக்கச்சென்ற சிலருடைய பார்வையில் பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய விழாவில், ஒரே மேடையில் முக்கியமான அரசியல் தலைமைகள் அமர்ந்திருக்கும் நிலையில் சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட தண்ணீரில் கூட நம்பிக்கை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் அங்கு வந்திருந்த பிரமுகர்கள் மற்றும் மக்களது கண்களிலும் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 8 =

*