;
Athirady Tamil News

மொராக்கோ போட்ட ஸ்பீட் பிரேக்கர்…. 1-1 என சம நிலையில் ஸ்பெயின்…. நாக் அவுட் முன்னேறுமா..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பையில் மொராக்கோவை வென்றால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் ஸ்பெயின் களமிறங்கியுள்ளது. ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இருப்பினும் நாக் அவுட் முன்னேற ஸ்பெயினுக்கு வாய்ப்பு உள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்று பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்குகின்றது.

இதில் பி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மொராக்கோவை சந்திக்கிறது ஸ்பெயின். ரொனால்டோவுடன் டிரா பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது. ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிராவானது. அதற்கடுத்து போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது. ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது. ஸ்பெயினுக்கு நல்ல வாய்ப்பு தற்போதைய நிலையில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது.

இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுகிறது. கோஸ்டா காப்பாற்றினார் இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களிலும் ஸ்பெயின் முன்னாள் சாம்பியன் என்ற கெத்துடன் விளையாடவில்லை. போர்ச்சுகல்லுக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்தாலும், ரொனால்டோ என்ற தனிமனிதன் ஹாட்ரிக் கோலடித்து டிரா செய்தார். டியோஜோ கோஸ்டா 3 கோல்கள் அடித்து இதுவரை ஸ்பெயினை காப்பாற்றியுள்ளார். ஈரானுடன் 1-0 என வென்றது. ஸ்பெயினுக்கு வாய்ப்பு பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் மொராக்கோ சேம் சைடு கோல் அடிக்க 1-0 என ஈரான் வென்றது.

அந்த ஆட்டத்தில் மொராக்கோ சிறப்பாக செயல்பட்டாலும் சேம் சைடு கோலால் தோல்வியடைந்தது. இந்தப் பிரிவில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுகல் ஈரானை சந்திக்கிறது. 4 புள்ளிகளுடன் உள்ள போர்ச்சுகல், 3 புள்ளிகளுடன் உள்ள ஈரானை சந்திக்கிறது. அதுபோன்ற இக்கட்டான நிலை ஸ்பெயினுக்கு இல்லை. அதனால் இன்றைய ஆட்டத்தில் முழு திறமையை வெளிப்படுத்தினால் அடுத்தச் சுற்றுக்குக்கு ஸ்பெயின் முன்னேற முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*