;
Athirady Tamil News

திண்டுக்கல் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையன் கைது..!!

0

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பஸ் ஸ்டாப்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று பணம் நிரப்ப வந்த அலுவலர்கள் கதவு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

‌ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்த கண்காணிப்பு கேமிராவின் ஒயர்களும் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து செம்பட்டி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏ.டி.எம். மையத்துக்கு வந்த கொள்ளையன் ஹெல்மெட் அணிந்திருந்தார்.

மையத்துக்குள் புகுந்ததும் ஹெல்மெட்டை கழற்றி விட்டு தனது உருவம் கேமராவில் பதிவாகாமல் இருக்க அதன் ஒயர்களை துண்டித்துள்ளார். அதன்பிறகு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஆனால் 2-வது லாக்கரை உடைக்க முடியாததால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை.

இதனால் அவர் அங்கிருந்து தப்பி சென்றார். ஒயர்களை துண்டிக்கும வரை அவரது உருவம் வங்கி மையத்தில் இருந்த கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த கொள்ளையில் ஈடுபட்டது ஆத்தூர் சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த பாண்டி மகன் காசிமாயன் (வயது21) என தெரிய வந்தது.

இததைனயடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். காசிமாயன் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*