;
Athirady Tamil News

கோவையில் என்.சி.சி. முகாமில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

0

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வண்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் ஹரிபிரியா (வயது 18). இவர் கோவை அரசு கலை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் ஹரிபிரியா என்.சி.சி.யில் இருந்தார்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான என்.சி.சி. முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் ஹரிபிரியா உள்பட ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை என்.சி.சி. மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் ஹரிபிரியா தனது அறைக்கு திரும்பினார். அப்போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த சக மாணவிகள் இது குறித்து என்.சி.சி. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஹரிபிரியாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*