வவுனியாவில் மரக்கடத்தல் – பொலிஸாரால் முறியடிப்பு..!! (படங்கள்)
வவுனியாவில் மரக்கடத்தல் ஒன்று ஒமந்தை பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிதெரியவருவதாவது,
ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஓமநதையில் இருந்து வவுனியாவிற்கு பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த கன்ரர் ரக வாகனத்தை ஒமந்தை பொலிஸார் திறத்திச்சென்ற போது கொக்குவெளி பகுதியில் வாகனம் தடம்புரண்டதையடுத்து மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் வகனத்தை கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இக்கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணையினை சம்பவ இடத்தில் ஒமந்தை பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையிலான பொலிஸாரினால் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா