;
Athirady Tamil News

மதுரவாயலில் 2 மகன்களுடன் தந்தை தற்கொலை..!!

0

மதுரவாயல், ஷேக்மான் யம் காமதேனு நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் அபிப் ரஹ்மான் (வயது45). சமையல் கேட்டரிங் தொழில் செய்து வந்தார்.

இவரது மனைவி நிஷா பாத்திமா. இவர்களது மகன்கள் முகமது நைப் (6), ரயான் (3). நிஷா பாத்திமா குடும்ப தகராறில் பிரிந்து இலங்கையில் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து அபிப் ரஹ்மான் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அபிப் ரஹ்மான் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அறையில் படுத்தநிலையில் அபிப் ரஹ்மான், அவரது 2 மகன்கள் முகமது நைப், ரயான் ஆகியோர் இறந்த நிலையில் கிடந்தனர். அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.

3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கையில் இருக்கும் நிஷா பாத்திமா சென்னை வரும் போது மகன்களை பார்க்க வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த வாரம் அவர் சென்னை வந்த போது கணவரையும், மகன்களையும் சந்திக்க வரவில்லை. இதனால் அபிப் ரஹ்மான் மன வேதனையில் இருந்தார்.

இது பற்றி அவர் நிஷா பாத்திமாவிடம் போன் செய்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மனவேதனையில் அபிப் ரஹ்மான், 2 மகன்களுக்கும் வி‌ஷம் கொடுத்துவிட்டு தானும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக அபிப் ரஹ்மான் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 11 =

*