;
Athirady Tamil News

பூநகரி பொலிசாரால் 8 லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு..!! (படங்கள்)

0

பூநகரி பொலிசாரால் 8 லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் நேற்று மீட்கப்பட்டுள்ளது,. மல்லாவி பிரதேசத்திலிருந்து ரிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சிகரமாக மறைக்கப்பட்டு குறித்த மர குற்றிகள் யாழ்ப்பாணம் நோக்கி எடுத்து செல்லப்படுகையில், பூநகரி சங்குப்பிட்டி பாலமருகில் அமைந்துள்ள சோதனை நிலையத்தில் வைத்து குறித்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

ரிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டு மேலே கற்களால் மூடப்பட்டு மறைத்து எடுத்து செல்லப்பட்ட மரக்குற்றிகளே இவ்வாறு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமாக சோதனை மேற்கொண்டபுாதே குறித்த மர குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மரக்குற்றிகளை ஏற்றி சென்ற ரிப்பர் வாகனத்தின் சாரதி இதன்புாது கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல்வேறு தடவைகளில் பொலிசாரால் மர குற்றிகள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*