;
Athirady Tamil News

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் போதைப்பொருளிற்கு எதிரான போராட்டம்..!! (படங்கள்)

0

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் போதைப்பொருளிற்கு எதிரான போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது

சர்வதேச ரீதியில் புாதைப்பொருளை ஒழிப்பதற்கான தினமான இன்றய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பூநகரி பிரதேசத்தினை போதையற்ற முன்னுதாரணமான பிரதேசமாக ஆக்குவோன் எனும் தொனிப்பொருளில் குறித்த புாராட்டம் முன்னெடுக்கப்பட்டது,

பூநகரி பிரதேச செயலகம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுடன் ரக்மான் நிறுவனமும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். இன்று முதல் இவ்வருட இறுதி வரை பூநகரி பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமங்களிற்கும் சென்று போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புனர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், சட்டவிரோத செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்த நடவடிக்கைகைள் முன்னெடுக்கப்படவுள்ளன.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − five =

*