;
Athirady Tamil News

அரியானாவில் சொத்து விவரத்தை கேட்ட இளைஞரை சுட்டுக்கொன்ற பஞ்சாயத்து தலைவர்..!!

0

அரியானா மாநிலம் சோனேபட் பகுதியில் உள்ள பிப்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அஷிஸ் தாஹியா (24). சமூக ஆர்வலரான அவர் அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் ராம் நிவாசின் சொத்து விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கோரியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அஷிஸ் தாஹியா உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராம் நிவாஸ் துப்பாக்கியால், அஷிஸ் தாஹியாவை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அஷிஸ் குடும்பத்தினர் கூறுகையில், ராம் நிவாஸ் ஏற்கனவே அஷிஸ் தாஹியாவை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அதுபற்றி போலீசில் புகார் கொடுத்தும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் ராம் நிவாஸ் ஆர்.டி.ஐ மூலம் தகவலுக்கு விண்ணப்பித்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 15 =

*