அரியானா மருத்துவமனையில் மின்தடையால் 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

அரியானா மாநிலத்தின் பானிபட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு சிகிச்சை பெற்றுவந்த இரண்டு குழந்தைகள் நிலைமை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியிலேயே இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் நான்கு குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மின்தடை ஏற்படவில்லை எனவும், வோல்டேஜ் குறைபாடினால் ஏ.சி. மற்றும் மருத்துவ உபகரணங்கள் செயல்படாமல் போனதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மின்தடையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.