;
Athirady Tamil News

இன்று பெருவுடன் மோதல்… ஆஸ்திரேலியா முன்னேறுமா… பிரான்ஸ் கையில் முடிவு உள்ளது..!!

0

ஃபிபா உலகக் கோப்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் சி பிரிவு ஆட்டத்தில் பெருவை சந்திக்கிறது ஆஸ்திரேலியா. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றாலும், பிரான்ஸ் – டென்மார்க் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்கியுள்ளன. சி பிரிவில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பெருவை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் தோல்வி சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது.

டென்மார்க் 1-0 என பெருவை வென்றது. அதற்கடுத்து நடந்த டென்மார்க், ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரான்ஸ் 1-0 என பெருவை வென்றது. powered by Rubicon Project ஆஸிக்கு 1 புள்ளி இதன் மூலம் 2 வெற்றிகளைப் பெற்ற பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இரண்டு தோல்விகளை சந்தித்த பெரு வெளியேறுகிறது.

டென்மார்க் 4 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 1 புள்ளியுடனும் உள்ளன. டாப்பில் எந்த அணி இந்த நிலையில் இன்று நடக்கும் சி பிரிவின் கடைசி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா பெருவை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்கும். ஆனால், பிரான்ஸ், டென்மார்க் இடையே நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தின் முடிவின்படியே அடுத்தச் சுற்றுக்கு நுழைவது டென்மார்க்கா அல்லது ஆஸ்திரேலியாவா என்பது தெரியவரும்.

நாக் அவுட் முன்னேறுமா இன்றைய ஆட்டத்தில் பெருவை ஆஸ்திரேலியா வென்றால் 4 புள்ளிகளைப் பெறும். பிரான்ஸ் எதிரான ஆட்டத்தில் வென்றால் அல்லது டிரா செய்தாலே டென்மார்க் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை தோல்வியடைந்தால் டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது கோல் வித்தியாசத்தில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பது தீர்மானிக்கப்படும். அதனால் பெருவுக்கு எதிராக அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − fifteen =

*