;
Athirady Tamil News

கைக்கு எட்டும் தூரத்தில் அடுத்தச் சுற்று…. பிரான்ஸை தூக்கி அடிக்குமா டென்மார்க்..!!

0

ஃபிபா உலகக் கோப்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் சி பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் மோதுகின்றன. பிரான்ஸ் ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆட்டத்தில் வென்றால் அல்லது டிரா செய்தாலே டென்மார்க் அடுத்தச் சுற்றுக்கு சுலபமாக முன்னேறிவிடும். 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்கியுள்ளன. சி பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பெருவையும் மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸை டென்மார்க்கும் சந்திக்கின்றன. டென்மார்க் வென்றது சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது. டென்மார்க் 1-0 என பெருவை வென்றது.

அதற்கடுத்து நடந்த டென்மார்க், ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரான்ஸ் 1-0 என பெருவை வென்றது. இக்கட்டான நிலையில் டென்மார்க் இதன் மூலம் 2 வெற்றிகளைப் பெற்ற பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இரண்டு தோல்விகளை சந்தித்த பெரு வெளியேறுகிறது. டென்மார்க் 4 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 1 புள்ளியுடனும் உள்ளன. பிரான்ஸை வீழ்த்துமா இந்த நிலையில் இன்று நடக்கும் சி பிரிவின் கடைசி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா பெருவை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸை சந்திக்கிறது டென்மார்க். ஏ

ற்கனவே 4 புள்ளிகளுடன் உள்ள டென்மார்க் இந்த ஆட்டத்தில் வென்றால் அல்லது டிரா செய்தாலே சுலபமாக அடுத்தச் சுற்றுக்கு நுழைந்துவிடும். முன்னேறப் போவது யார் இன்றைய ஆட்டத்தில் பெருவை ஆஸ்திரேலியா வென்றால் 4 புள்ளிகளைப் பெறும். பிரான்ஸ் எதிரான ஆட்டத்தில் ஒருவேளை தோல்வியடைந்தால் டென்மார்க் அணியும் 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது கோல் வித்தியாசத்தில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பது தீர்மானிக்கப்படும். அதனால் சிக்கல் ஏதும் இல்லாமல் சுலபமாக முன்னேற, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு டென்மார்க் போராடும். குறைந்தபட்சம் டிரா செய்ய முயற்சிக்கும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 14 =

*