3300 போன் கால்ஸ், 1500 மெசேஜ்.. டெல்லி ராணுவ மேஜர் மனைவி கொலை வழக்கில் அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்..!!

ராணுவ அதிகாரியின் மனைவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி. இவருடைய மனைவி சைலஜா திவிவேதி.
35 வயதான சைலஜா கடந்த சனிக்கிழமை காலை ‘பிசியோதெரபி’ சிகிச்சைக்காக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு காரில் சென்றார். கார் டிரைவர், சைலஜாவை மருத்துவமனையில் இறக்கிவிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பினார்.
பின்னர் சில மணி நேரத்துக்கு பிறகு அவரை அழைத்துவருவதற்காக டிரைவர் காரை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார்
கணவரிடம் தகவல்
அப்போது மருத்துவமனையில் இருந்தவர்கள் சைலஜா மருத்துவமனைக்குள் வரவில்லை என்று கூறிவிட்டனர். இதனால் குழப்பம் அடைந்த டிரைவர் உடனடியாக வீட்டுக்கு சென்று அமித் திவிவேதியிடம் நடந்ததை கூறினார்
சாலையில் பெண் பிணம்
இதையடுத்து அமித் திவிவேதி, மனைவியை தேடி அலைந்தார். அப்போது டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் பெண் பிணம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
முகம் சிதைக்கப்பட்ட..
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தது தெரிந்தது. போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ராணுவ மேஜரின் மனைவி
மர்ம நபர் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் அவருடைய முகத்தில் காரை ஏற்றி சிதைத்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். இதற்கிடையில் எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால் அமித் திவிவேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை அமித் திவிவேதியிடம் காட்டி விசாரித்தனர்.
கொலை வழக்காக மாற்றம்
அப்போதுதான் கொலை செய்யப்பட்டது ராணுவ அதிகாரி அமித் திவிவேதியின் மனைவி சைலஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆள் மாயமான வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணையை தொடங்கினர்.
மற்றொரு ராணுவ அதிகாரி
முதற்கட்ட விசாரணையில் அமித் திவிவேதியின் நண்பரான மற்றொரு ராணுவ அதிகாரி நிகில் ராய் ஹண்டாவுக்கு சைலஜா கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடியபோது அவர் செல்போனை அணைத்துவிட்டு, தலைமறைவானது தெரியவந்தது.
திடுக்கிடும் தகவல்கள்
இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் பதுங்கி இருந்த அந்த ராணுவ அதிகாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் ராணுவ அதிகாரியின் மனைவி கொலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதல் கொண்ட ஹண்டா
அதாவது ராணுவ மேஜர் அமித் 2015ஆம் ஆண்டு நாகலாந்தில் பணியாற்றிய போது ஹண்டாவுடன் நட்பு ஏற்பட்டது. அப்போது அமித்தின் மனைவி சைலஜாவை கண்ட ஹண்டா நண்பரின் மனைவி என்று தெரிந்தும் அவர் மீது காதல் கொண்டார்.
திருமணம் செய்ய வற்புறுத்தல்
இந்நிலையில் அமித் டெல்லிக்கு பணிமாறுதல் ஆனார். அதற்குள் சைலஜாவுடன நட்பை ஏற்படுத்திக்கொண்டார் ஹண்டா. அடிக்கடி டெல்லிக்கு வந்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சைலஜாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு சைலஜா மறுத்ததால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
திருமணம் செய்ய திட்டம்
இந்நிலையில் இம்மாதம் 4ஆம் தேதி டெல்லிக்கு வந்த ஹண்டா அவரது மகனை டெல்லி பேஸ் மருத்துவமனையில் அனுமதித்தார். அதே மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சைபெற்றுவந்தார் லைஜா. எப்படியாவது சைலஜாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் திட்டம் போட்ட ஹண்டா தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.
3 முறை காரை ஏற்றி
அப்போது தப்ப முயன்ற சைலஜா காரிலிருந்து குதிக்க முயன்றுள்ளார் சைலஜா. இதனால் காரை வேகமாக இயக்கிய ஹண்டா சைலஜாவை கீழே தள்ளி அவர் மீது 3 முறை காரை ஏற்றி நசுக்கி கொன்றுள்ளார்.
1500 மெசேஜ்
ஹண்டாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதனை ஆய்வு செய்ததில் ஜனவரி மாதத்தில் இருந்து சைலஜாவுடன் 3300 போனில் பேசியுள்ளார். 1500 மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதில் பெரும்பாலான மெசேஜ்களுக்கு சைலஜா பதில் சொல்லவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலி பேஸ்புக் கணக்கு
அதுமட்டுமின்றி ஹண்டா தொழிலதிபர் எனக்கூறி போலி பேஸ்புக் கணக்கு ஒன்றையும் தொடங்கி பல பெண்களுடன் பழகி வந்துள்ளார். டெல்லியை சேர்ந்த 3 பெண்களிடம் அவர் நெருங்கி பழகி வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.