;
Athirady Tamil News

வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அர்ஜென்டினா… நைஜீரியாவை சந்திக்கிறது… மெஸ்ஸி மேஜிக் காட்டுவாரா..!!

0

ஃபிபா உலகக் கோப்பையில் இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் டி பிரிவு ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் நைஜீரியாவை சந்திக்கிறது அர்ஜென்டினா. இந்த ஆட்டத்திலாவது லியோனல் மெஸ்ஸி மேஜிக் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்கியுள்ளன. டி பிரிவில் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் குரேஷியா, ஐஸ்லாந்து சந்திக்கின்றன. அர்ஜென்டினா அதிர்ச்சி டி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்திலேயே அர்ஜென்டினாவுடன் 1-1 என டிரா செய்து ஐஸ்லாந்து அதிர்ச்சி கொடுத்தது.

குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது. அர்ஜென்டினாவுக்கு அடுத்த அதிர்ச்சியை அளித்தது குரேஷியா. 3-0 என்ற கோல் கணக்கில் குரேஷியா வென்றது. அதற்கடுத்த ஆட்டத்தில் நைஜீரியா 2-0 என ஐஸ்லாந்தை வென்றது. மோசமான நிலை இரண்டு ஆட்டங்களில் 2 வெற்றிகளைப் பெற்று, 6 புள்ளிகளுடன் குரேஷியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நைஜீரியா 3 புள்ளிகளுடன் உள்ளது.

ஐஸ்லாந்து மற்றும் அர்ஜென்டினா தலா 1 புள்ளியுடன் உள்ளன. மெஸ்ஸி மேஜிக் மாயம் இந்த உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும் ஒருவர். ஆனால், இதுவரை அவருடைய மேஜிக் பலிக்கவில்லை. ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ரொனால்டோ ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அடித்துள்ளார். மற்றொரு நட்சத்திர வீரரான பிரேசிலின் நெய்மர் ஒரு கோல் அடித்தார். பிரிவு சுற்றுடன் வெளியேறும் கடைசி ஆட்டத்தில் எகிப்தின் சலா ஒரு கோல் அடித்தார். ஆனால், மெஸ்ஸி ஒரு கோல்கூட அடிக்காதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாய்ப்பு கிடைக்கும் இன்று நடக்கும் ஆட்டத்தில் நைஜீரியாவுக்கு எதிராக வென்றால் அர்ஜென்டினா நான்கு புள்ளிகளுடன் இருக்கும். அதே நேரத்தில் குரேஷியாவிடம் ஐஸ்லாந்து தோல்வி அடைய வேண்டும். அப்போதுதான் அர்ஜென்டினா அடுத்தச் சுற்று முன்னேற முடியும். கட்டாய வெற்றி என்ற நிலையில் உள்ள அர்ஜென்டினா, மெஸ்ஸி மேஜிக் நிகழ்த்துவார் என்ற நம்பிக்கையில் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − seven =

*