;
Athirady Tamil News

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!!

0

சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் பொல்கம்பல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அதற்கான ரவைகள் 4 உம் குறித்த நபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுகம, கலபடவத்த பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (27) மதுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 5 =

*