;
Athirady Tamil News

புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது..!!

0

மஹவெல, மில்லவான பகுதியில் தொல்பொருட்களை அகழும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாவனெல்ல, தொபகஹவெல, மாத்தளை அகுரம்பட மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 24, 46, 29, 35 மற்றும் 37 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களிமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை நாவுல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*