;
Athirady Tamil News

12 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வல்லபட்டைகள் பறிமுதல்..!!

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வௌிநாட்டிற்கு கொண்டு செல்லபடவிருந்த 18.5 கிலோ கிராம் வல்லபட்டைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

33 வயதான இலங்கையர் ஒருவர் நேற்று (26) காலை 8.10 மணியளவில் டுபாய்க்கு கொண்டு செல்வதற்காக இவற்றை எடுத்துச் சென்ற வேளையே சுங்க அதிகாரிகளால் இவ் வல்லபட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வல்லபட்டைகள் சுமார் 12 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + thirteen =

*