;
Athirady Tamil News

நடப்பு சாம்பியனுக்கு வந்த சோதனை… தென்கொரியாவுடன் வென்றால் நாக் அவுட் இல்லையென்றால் கெட்அவுட்..!!

0

ஃபிபா உலகக் கோப்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் எப் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி தென்கொரியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மனி உள்ளது. மேலும் ஸ்வீடன், மெக்சிகோ ஆட்டத்தின் முடிவுக்காகவும் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிகின்றன. எப் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் கொரியாவை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ, ஸ்வீடன் மோதுகின்றன. ஜெர்மனிக்கு ஷாக் எப் பிரிவில் நடந்த முதல் லீக் ஆட்டத்திலேயே ஜெர்மனிக்கு அதிர்ச்சி கிடைத்தது.

மெக்சிகோ 1-0 என ஜெர்மனியை வென்றது. ஸ்வீடன் 1-0 என தென்கொரியாவை வென்றது. பிரிவின் மூன்றாவது ஆட்டத்தில் மெக்சிகோ 2-1 என தென்கொரியாவை வென்றது. ஜெர்மனி 2-1 என ஸ்வீடனை வென்றது. டாப்பில் மெக்சிகோ தற்போதைய நிலவரப்படி மெக்சிகோ 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஜெர்மனி, ஸ்வீடன் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. இரண்டு தோல்விகளை சந்தித்தத தென் கொரியா பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகிறது.

வென்றாக வேண்டும் இன்று நடக்கும் எப் பிரிவின் கடைசி லீக் ஆட்டங்களில் ஜெர்மனி, தென்கொரியாவை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ, ஸ்வீடன் மோதுகின்றன. அடுத்தச் சுற்றுக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளன. பரிதாப நிலையில் ஜெர்மனி நடப்பு சாம்பியனான ஜெர்மனி, இதுவரை நான்கு முறை உலகக் கோப்பையை வென்றது. ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையை வென்று, அதிக முறை வென்ற பிரேசில் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கியது. மேலும் தொடர்ந்து 2வது முறையாக வெல்லும் இலக்குடனும் இருந்தது.

இன்று நடக்கும் ஆட்டத்தில் ஜெர்மனி வென்றாலும் அடுத்தச் சுற்றுக்கு சுலபமாக முன்னேற முடியாது. இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோவை ஸ்வீடன் வென்றால், மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் இருக்கும். கோல் வித்தியாசத்தில்தான் அடுத்தச் சுற்றுக்கு நுழைவது யார் என்பது தெரிய வரும். அதனால் அதிக கோல்களில் வென்றாக வேண்டிய நிலையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*