;
Athirady Tamil News

மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி..!!

0

மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர், செல்வநகர் பகுதியில் நேற்று (26) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் சிறு வியாபாரியான மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பத்திரப்பன் சேது நம்பு என தெரிய வந்துள்ளது.

மன்னார் நகரில் இருந்து நேற்று (26) இரவு தாழ்வுபாடு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் உள்ள மதகுடன் மோதி பின்னர் சைக்கிளில் பயணித்த குறித்த குடும்பஸ்தர் மீதும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தை ஏற்படுத்திய குறித்த தனியார் பேருந்தின் சாரதி சம்பவ இடத்தில் பேருந்தை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக சம்பவ இடத்தில் ஒன்று கூடிய மக்கள் காயமடைந்த நபரை மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் மன்னார் எமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த பத்திரப்பன் சேது நம்பு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பேருந்தின் சாரதி இன்று (27) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + four =

*