;
Athirady Tamil News

யாழ் சிறுமி கொலை பயங்கரம்: குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!!

0

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ;மல்லாக்கம் நீதவான் ;உத்தரவு பிறப்பித்துள்ளார்.யாழ்ப்பாணம் -சுழிபுர பகுதி கிணற்றில் இருந்து, ;சிறுமி சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞரான சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அவரிம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள 11 ஆம் திகதி ;வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சிறுமியை கொலை செய்த சந்தேக நபருக்கு உடனடியாக தண்டனை வழக்குமாறு கோரிக்கை விடுத்து, யாழ் பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமி கல்வி கற்ற அரச பாடசாலையின் முன்னதாக குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

6 வயது பிஞ்சு மழலை கொலை : சந்தேக நபரின் பரபரப்பு வாக்கு மூலம்..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − six =

*