;
Athirady Tamil News

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதே நோக்கம்..!! (வீடியோ)

0

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நோக்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதே என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்துவதுடன் தற்போதைய அரசு மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்ப்பதே எமது அடுத்த கட்ட நடவடிக்கை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 14 =

*