;
Athirady Tamil News

பாகிஸ்தான் காபந்து பிரதமருடன் மோதல் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீர் ராஜினாமா..!!

0

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை 25-ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, காபந்து அரசின் பிரதமராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி நசிருல் முல்க் பொறுப்பேற்றுள்ளார்.

நசிருல் முல்க்

இந்நிலையில், மந்திரிக்கான அந்தஸ்துடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிவந்த ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நசீர் ஜன்ஜுவா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் இஸ்லாமாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் ராணுவ பல்கலைக்கழகத்தின் தலைவராக பதவிவகித்த ஜனுஜா, கடந்த 23-10-2015 அன்று அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

காபந்து பிரதமர் நசிருல் முல்க் தலைமையிலான மந்திரிசபையில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் காலித் நயீம் லோதி சமீபத்தில் மந்திரியாக சேர்க்கப்பட்டார். இதனால், ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக ஜனுஜா பதவி விலகியுள்ளதாக தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*