;
Athirady Tamil News

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் படுகொலை – மியான்மர் நாட்டு பணிப்பெண் கைது…!!

0

சிங்கப்பூர் நகரின் வடக்கு சோவா சு காங் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 12-வது மாடியில் வசித்துவந்த மெஹ்ரோட்டடா ஷஷி என்ற 70 வயது பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கடந்த 25-ம் தேதி அவசர உதவி மையத்துக்கு தகவல் வந்தது.

டாக்டர்கள் சென்று அவரை பரிசோதித்த பின்னர் சுமார் அரை மணி நேரத்தில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவரது மரணம் இயற்கையானது அல்ல, அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அந்த வீட்டில் பணியாற்றிவந்த மியான்மர் நாட்டுப் பெண்ணான ஜின் மார் நுவே(23) என்ற பெண்ணை கைது செய்து விசாரித்தபோது மெஹ்ரோட்டடா ஷஷியை அவர் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதைதொடர்ந்து, கொலையாளி ஜின் மார் நுவே-வை வீடியோ கான்பிரன்சிங் மூலம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கின் விசாரணையை ஜூலை நான்காம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஜின் மார் நுவே-வை ஜாமினில் விடுவிக்க மறுத்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் ஜின் மார் நுவே குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், சிங்கப்பூர் நாட்டு சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*