;
Athirady Tamil News

’மைத்திரியின் ஆலோசகரே அச்சுறுத்துகிறார்’- சந்தியா எக்னெலிகொட..!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக உள்ள பௌத்த பிக்கு ஒருவரே தன்னை அச்சுறுத்தி வருவதாக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(26) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. எனது பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

எனக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்குப் பின்னால், ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரே இருக்கிறார். அவரின் முகநூலில் எனக்கு எதிரான பதிவுகளை காணமுடியும்.

மேலும் எனது கணவர் விடுதலை புலிகள் அமைப்போடு தொடர்பு வைத்திருந்ததாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறான எந்தவிதமான தொடர்புகளும் அவருக்கு இல்லை. இவ்வாறான போலியான பரப்புரைகளை செய்து பிரகீத் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்கப் பார்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*