;
Athirady Tamil News

றெஜினா கொலை: மாணவி ஒருவர் சாட்சியாக இணைப்பு..!!

0

சிறுமி கொலை வழக்கில் 7 வயது மாணவி ஒருவர் கண்கண்ட சாட்சியாக இணைக்கப்படவுள்ளார். அந்த மாணவியிடம் பொலிஸார் இன்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது 6 )என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கிய பிரதான சந்தேகநபர், மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று பிற்பகல் முற்படுத்தப்பட்டார்.

ஏனைய சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் இருவர், கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். பிரதான சந்தேகநபரும் மற்றொருவரும் சிறுமியை பற்றைக்குள் அழைத்துச் சென்றதை அவர்கள் கண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பாடசாலையில் தரம் 2இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் சாட்சியாக இணைக்கப்படவுள்ளார். அந்த மாணவியிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது

இதேவேளை, மாணவிக்கு சம்பவ தினத்தன்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது.

6 வயது பிஞ்சு மழலை கொலை : சந்தேக நபரின் பரபரப்பு வாக்கு மூலம்..!!

யாழ் சிறுமி கொலை பயங்கரம்: குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*