;
Athirady Tamil News

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி..!!

0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மிரிஜ்ஜவல, மொரட்டுவ, மஹவிலச்சி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களிலேயே இவ்வாறு மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஹம்பந்தோட்டை – அம்பலந்தொட்ட பிரதான வீதியின் மிரிஜ்ஜவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதிலேயே குறித்து விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பந்தோட்டை, கொக்கல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மொரட்டுவ, பண்டாரநாயக்க மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மஹவிலச்சி, ஓயமடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதிலேயே குறித்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரன்துவ பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*