;
Athirady Tamil News

ஆசியாவின் மானத்தை காப்பாற்றுமா ஜப்பான்… இன்று போலந்துடன் மோதுகிறது..!!

0

ஃபிபா உலகக் கோப்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் எச் பிரிவு ஆட்டத்தில் ஜப்பான், போலந்தை சந்திக்கிறது. ஆசியாவில் இருந்து பங்கேற்ற நான்கு நாடுகள் முதல் சுற்றுடன் வெளியேற, கடைசியாக உள்ள ஜப்பான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன.

எச் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஜப்பான், போலந்தை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் செனகல், கொலம்பியா மோதுகின்றன. ஜப்பானுக்கு வெற்றி எச் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வென்றது. செனகல் 2-1 என போலந்தை வென்றது. அதற்கடுத்து நடந்த ஜப்பான், செனகல் ஆட்டம் 2-2 என டிராவானது. கொலம்பியா 3-0 என போலந்தை வென்றது. ஜப்பானுக்கு வாய்ப்பு தற்போதைய நிலவரப்படி ஜப்பான் மற்றும் செனகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

கொலம்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டு தோல்விகளை சந்தித்த போலந்து பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகிறது. வென்றாக வேண்டும் இன்று நடக்கும் எச் பிரிவின் கடைசி லீக் ஆட்டங்களில் ஜப்பான், போலந்தை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் செனகல், கொலம்பியாவை சந்திக்கிறது. இதில் வென்றால்தான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் நிலையில், ஜப்பான் மற்றும் செனகல் உள்ளன. முன்னேறுமா ஜப்பான் இந்த உலகக் கோப்பையில் ஆசியாவில் இருந்து பங்கேற்ற ஆஸ்திரேலியா, ஈரான், சவுதி அரேபியா, தென் கொரியா ஆகியவை முதல் சுற்றுடன் வெளியேறுகின்றன.

நாக் அவுட் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஜப்பானுக்கு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் குறைந்தபட்சம் டிரா செய்தால், அடுத்தச் சுற்றுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அந்த சந்தேகத்துக்கு இடமளிக்காமல் இன்றைய போட்டியில் வென்று ஆசியாவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு ஜப்பான் முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 18 =

*