;
Athirady Tamil News

ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்துக்கு பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்துக்கு பிளாஸ்ரிக் கதிரைகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்

தனது 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்துக்கு ரூ.75,000/= பெறுமதியான பிளாஸ்ரிக் கதிரைகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்துள்ளார்.

இன்று 28.06.2018 வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம்பெற்ற காலைப்பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்டு மேற்படி பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன் , பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − twelve =

*