;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீர் சிறப்பு ரெயிலில் சென்று கொண்டிருந்த 9 ராணுவ வீரர்கள் மாயமானதால் பரபரப்பு..!!

0

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதிக்கு ராணுவ சிறப்பு ரெயிலில் மொத்தம் 83 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து, முகல்சராய் ரெயில் நிலையத்தில் சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது 83 பேரில் 9 ராணுவ வீரர்கள் மாயமாகியது தெரிய வந்தது.

இவர்கள் அனைவரும் பர்தமன் மற்றும் தன்பாத் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது மாயமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக ராணுவ கமாண்டர் முகல்சராய் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, மாயமான பாதுகாப்பு வீரர்கள் மீது தலைமறைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*