;
Athirady Tamil News

நாக் அவுட் நுழைவது யார்…. கொலம்பியா – செனகல் இடையே குடுமிப்பிடி சண்டை..!!

0

ஃபிபா உலகக் கோப்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் எச் பிரிவு ஆட்டத்தில் சென்கல் மற்றும் கொலம்பியா சந்திக்கின்றன. முந்தைய உலகக் கோப்பையில் அதிர்ச்சி அளித்த இவ்விரண்டு அணிகளில் யார் நாக் அவுட் சுற்று முன்னேறுவது என்று கடும் போட்டி உள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன.

போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன.

எச் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஜப்பான், போலந்தை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் செனகல், கொலம்பியா மோதுகின்றன. செனகல் வென்றது எச் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வென்றது. செனகல் 2-1 என போலந்தை வென்றது. அதற்கடுத்து நடந்த ஜப்பான், செனகல் ஆட்டம் 2-2 என டிராவானது. கொலம்பியா 3-0 என போலந்தை வென்றது. கடும் போட்டி தற்போதைய நிலவரப்படி ஜப்பான் மற்றும் செனகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

கொலம்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டு தோல்விகளை சந்தித்த போலந்து பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகிறது. யாருக்கு வாய்ப்பு 2002ல் நடந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடிய செனகல், கால் இறுதி வரை நுழைந்தது. லீக் ஆட்டங்களில் அப்போதைய நடப்பு சாம்பியனான பிரான்ஸை வென்று அதிர்ச்சி அளித்தது. தற்போது 6வது உலகக் கோப்பையில் விளையாடும் கொலம்பியா, 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த உலகக் கோப்பையில் விளையாடியது.

காலிறுதி வரை நுழைந்து அசத்தியது. ஜேம்ஸ் ரோட்ரிகுஸ் உள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. வென்றாக வேண்டும் இன்று நடக்கும் எச் பிரிவின் கடைசி லீக் ஆட்டங்களில் ஜப்பான், போலந்தை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் செனகல், கொலம்பியாவை சந்திக்கிறது. இதில் வென்றால்தான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் நிலையில், கொலம்பியா உள்ளது. டிரா செய்தாலே செனகல் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 1 =

*