;
Athirady Tamil News

காணாமற்போன முதியவர் சடலமாக மீட்பு..!!

0

முல்லைத்தீவு, புத்துவெட்டுவானில் கடந்த 23 ஆம் திகதி காணாமற்போன முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்துவெட்டுவான், சுடலைப் பகுதியில் வைத்தே குறித்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

81 வயதுடைய வீரகத்தி சோமசுந்தரம் என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி அதிகாலையில் இருந்து, குறித்த முதியவரைக் காணவில்லை என ஐயன்கன் குளம் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 8 =

*