;
Athirady Tamil News

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் ஓயாது தொடரும் தமிழர் இயக்கத்தின் முன்னெடுப்புக்கள்..!!

0

காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 500 வது நாளையெட்டும் நிலையில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் ஓயாது தொடரும் தமிழர் இயக்கத்தின் முன்னெடுப்புக்கள்.

காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 500 வது நாளையெட்டும் நிலையில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் ஓயாது தொடரும் தமிழர் இயக்கத்தின் முன்னெடுப்புக்கள்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடர் 18.06.2018 அன்று ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

கடந்த 18.06.2018 அன்று மனித உரிமை ஆணையாளரால் உலகளாவியரீதியில் பல்வேறு நாடுகளின் தற்போதைய மனித உரிமை நிலைப்பாடுகள் சார்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ; சிரியா, மியன்மார், வெனிசுவெலா உள்ளிட்ட 22 நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் சார்ந்து தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.எனினும் இலங்கையில் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எவ்வித கருத்துக்களும் இடம்பெறவில்லை.

மாறாக அவ்வறிக்கையில் மனித உரிமை நிலைப்பாடுகள் சார்ந்து ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் காணப்படும் ஆர்ஜன்டினா, அவுஸ்திரேலியா, துனிசியா உள்ளிட்ட 20 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வறிக்கையானது தொடர்ச்சியாக இலங்கையில் தமிழரிற்கெதிராகவும், தமிழர் நிலப்பரப்பிலும் கட்டமைப்புசார் தமிழினவழிப்பை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசின் சர்வதேச நாடுகளுடனான கபடத்தனமான இராசதந்திர செயற்பாடுகளின் வெற்றியையே பறைசாற்றி நிற்கின்றது.

இவ்வறிக்கையின் மறுபக்கமானது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப்பேரவலமான தமிழினவழிப்பையும், தொடர்ச்சியான கட்டமைப்புசார் இனவழிப்பையும் தமிழர்தரப்பானது சர்வதேச நாடுகளின் கவனத்திற்குக் கொண்டுசென்று, அவர்களது ஆதரவை இனவெறிச்சிங்கள அரசிற்கு எதிராக திருப்புவதில் தவறியுள்ளதையே கோடிட்டுக்காட்டுகின்றது.அத்துடன் தமிழர் இயக்கப் பிரதிநிதிகள் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஈழத் தமிழர் பிரச்சனை சார்ந்து பல்வேறுபட்ட சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மதிப்பிற்குரிய Seid al-Hussein அவர்களையும் தமிழர் இயக்கப் பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர்.

அத்துடன் 38வது கூட்டத்தொடரின் 2ம் நாளான 19.06.2018 அன்று, மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சார்ந்து இடம்பெற்ற பொது விவாதத்தில் அங்கத்துவ மற்றும் பார்வையாளர் நாடுகளைத்தொடர்ந்து, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பொது விவாதத்தில் தமிழர் இயக்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்திருந்தனர்.

இதன்போது அவர்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு இடம்பெற்று 9 வருடங்கள் கடந்தும் ஈழத்தமிழரிற்கு மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நீதியைச் சுட்டிக்காட்டியதுடன், மனித உரிமை சபையினால் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தாது கால இழுத்தடிப்பு செய்வதுபற்றியும் அத்துடன் ஈழத்தில் தொடர்ந்து இடம்பெறும் வலிந்து காணாமலாக்கப்படுதல்,நில ஆக்கிரமிப்பு, இராணுவமயமாக்கல்,பாலியல் வன்கொடுமைகள், தடுப்பு முகாம்கள்,அரசியற்கைதிகள் விடயங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்தனர்.

விசேடமாக கடந்த 18.05.2018ல் தமிழினவழிப்பு நாளை நினைவுகூர்ந்தவர்களிற்கும், அதை ஒழுங்கமைத்தோரிற்குமெதிராக சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் மேற்கொண்ட அச்சுறுத்தல்கள், விசாரணைகள் தொடர்பாகவும் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன், மேற்கூறப்பட்ட விடயங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் கோரப்பட்டது.
அத்துடன் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரெர்லைட் ஆலைக்கெதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் 13 பேர் தமிழகப் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும், அங்கு மனித உரிமை ஆர்வலர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதிற்கெதிராகவும் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அத்துடன் சுய நிர்ணய உரிமையும் தன்னாட்சியும் எனும் தலைப்பின் கீழ் பக்கவறை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.இந் நிகழ்வு எம்மைப்போல் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் பிற நாட்டவருடணினைந்து (காஷ்மீர், மேற்கு சகாரா, குர்திஷ்,கமரூன்,அலாஸ்கா…) மேற்கொள்ளப்பட்டது, இதில் பல்வேறுபட்ட தரப்பினைச் சேர்ந்தவர்களும் பங்குகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்ததோடு தமிழீழத்திற்கான தமது தோழமையையும் வெளிப்படுத்தினர்.

தொடர்ச்சியாக இடம்பெறுவரும் கூட்டத்தொடரில் மொத்தமாக 16 இற்கும் மெற்பட்ட பக்கவறை நிகழ்வுகளை சிறீலங்கா இனப்படுகொலை அரசைக் கண்டித்து இடம்பெறவிருப்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இவ்வாறான வேலைத்திட்டங்கள் ஊடாகவே தமிழீழத்திற்கான சர்வதேச ஆதரவையும், வெளியுறவுக் கொள்கையையும் தூர நோக்கில் கட்டடியமைக்கலாம்.

விசேடமாக இக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐக்கிய நாடுகள் சபையின் முன் திடலான ஈகைப் பேரொளி முருகதாசன் திடலின் வேற்றின மக்களுக்கான கவனயீர்ப்பையும் மேற்கொண்டனர். அத்துடன் சுவிஸ் வாழ் தமிழ்ப்பேசும் மக்களையும் சந்திப்பதற்கான மக்கள் சந்திப்புக்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழர் இயக்கத்தினால் தற்பொழுது சுவிஸ் ரீதியாகவும், பன்நாடுகள் ரீதியாகவும் முன்னெடுக்கப்படும் தமிழீழம் நோக்கிய முன்னெடுப்புக்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் எதிர்வரும் 30.06.2018 பிற்பகல் 13 மணி தொடக்கம் யெனீவா வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பொன்றும் தமிழர் இயக்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

சந்திப்புக்கள் இடம்பெறும் காலமும், நேரமும் முகவரியும்

பேர்ன் மாநிலம்
காலம்: 29.06.2018
நேரம்: 19 மணி முதல்
முகவரி: Zieglerstrasse 20, 3007 Bern


தமிழர் இயக்கத்தின் சந்திப்பு / யெனீவா மாநிலம்
காலம்: 30.06.2018
நேரம்: 13மணி முதல்
முகவரி:Fondation pour l’Expression Associative, Rue des Savoises 15,1205 Genève

பாசல் மாநிலம்
காலம்: 01.07.2018
நேரம்: 16 மணி முதல்
முகவரி: தமிழர் மன்றம், Wattstrasse 4, 4056 Basel

ஊடகப்பிரிவு
தமிழர் இயக்கம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 9 =

*