;
Athirady Tamil News

அனந்தி சசிதரன் அமைச்சுக்கு வேட்டு? -நீதிமன்ற தீரப்பின் எதிரொலி..!!

0

வடக்கு மாகாண தற்போதைய அமைச்சர் அனந்தி சசிதரன் அப்பதவியை வகிக்க முடியாது என கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(29) தீர்ப்பளித்தது.

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இதன் படி வடக்கு மாகாண போக்குவரத்துஇ உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் எனவும் அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலக வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் “வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு” என்று உத்தரவிடக் கோரி முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜானக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணைகள்இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பினை அடுத்து ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த டெனீஸ்வரன் “எனது அமைச்சினை தற்போது பிடுங்கி கூறு கூறுகளாக வைத்திருக்கின்ற முதலமைச்சர், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது” என கூறியுள்ளார்.

மீண்டும் வடக்கு மாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சராக பா.டெனீஸ்வரன்..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*